Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

விளாம் பழத்தை கர்ப்பிணிகள் உட்கொள்வது நல்லதா? கெட்டதா?

கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

 இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. 

மேலும் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து நிவாரணமம் கிடைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், வாதத்தை வராமல் தடுக்கும் . இப்படி கோடை காலத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு பாதிப்புகளை குணமாக்குவதில் இந்த பழம் சிறந்த நன்மை அளிக்கிறது. 

இதுமட்டுமில்லாமல் கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சௌமியா லட்சுமி கூறுகிறார். கர்ப்பிணிகளுக்கு விளாம் பழம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றின் ஆதாரமாக முதன்மையாக விளங்குகிறது. 

கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வைத் தருகிறதாம் விளாம் பழம். கர்ப்ப கால நீரிழிவு உள்ள தாய்மார்கள் மட்டும் இதனை உட்கொள்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டுமாம். ஏனென்றால் இதில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால்தான். 

விளாம் பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. 

100 கிராம் விளாம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள். 

1.கார்போஹைட்ரேட் 31.8 கிராம் 
2.புரதம் 1.8 கிராம் 
3. நார்ச்சத்து 2.9 கிராம் 
4.பொட்டாசியம் 600 மிகி 
5. வைட்டமின் சி 8 மிகி 
6.கால்சியம் 85 மிகி 
7.இரும்புசத்து 0.7 மிகி 
8. பாஸ்பரஸ் 50 மிகி

கர்ப்ப காலத்தில் இப்பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? 

தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுகிறது. விளாம் பழ சாற்றில் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி கம்மியாக இருக்கும். இதனால் நிறைய தொற்று பாதிப்பு அவர்களை ஆட்கொள்ள வாய்ப்புண்டு. 

பெண்கள் விளாம் பழ ஜூஸ் குடிப்பதால் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவும் மேலும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

 உடலின் நீர்ச்சத்து அளவை நிர்வகிக்க உதவுகிறது விளாம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இந்த சத்து உடலின் திரவ அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

 கர்ப்ப காலத்தில் விளாம் பழம் அல்லது விளாம் பழ ஜூஸ் உட்கொள்வதால் உடலில் உள்ள திரவ அளவு மற்றும் எலக்ட்ரோலைட் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். 

முக்கியமாக செரிமானத்திற்கு உதவுகிறது கர்ப்ப காலத்தில் செரிமான கோளாறுகள் பொதுவாக வருவதுதான் கருவில் குழந்தை வளர்ச்சி அடையும் போது, செரிமான மண்டலத்தில் ஒருவித அழுத்தம் இருப்பதால் செரிமான கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படலாம். 

ஆனால் இந்த பாதிப்பை விளாம் பழம் சரி செய்யக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக