Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை!

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

துரித உணவுகள்

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால், பல ஆரோக்ய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்படிப்பட்ட உணவுகள் தவிர்ப்பது நல்லது.

பிரிட்ஜ்

கோடைகாலங்களில் நாம் மட்டும் ஆரோக்யமாக இருந்தால் போதாது. நாம் பயன்படுத்தும் பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் ஆத்திரமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று தான் குளிர்சாதனப்பெட்டி. எனவே, வாரம் ஒருமுறையாவது குளிசாதனப்பெட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ந்த உணவுகள்

கோடைகாலங்களில், நாம் அதிகமாக குளிர்ந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நாம் குளிர்ந்த உணவுகளையும் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக