Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

ஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது நீட்டிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) மாடலுக்கு முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கரணங்கள் குறித்தும், Hyundai Creta SUV-வியின் சிறப்பம்சங்கள் குறித்தும் சில தகவல்களை பார்க்கலாம்.!

இந்தியாவின் SUV (sport utility vehicle) கார் சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அசத்தல் மாடலாக உள்ளது. அதன் டிசைன் அமைப்பு, எஞ்சின் திறன், விலை என அனைத்தும் சிறப்பானதாக இருக்கிறது. சென்ற மார்ச் மாதம் மத்தியில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி-யின் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

இரண்டாம் தலைமுறை மாடலாக வந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விற்பனை தினத்தன்று வரை 14,000 முன்பதிவுகளை பெற்றிருந்தது. ஆனால், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரத்தில் கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், கார் விற்பனை முடங்கியது.

ஊரடங்கு  நீடிக்கும் நிலையிலும் முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ஹூண்டாய் விற்பனை பிரிவு அதிகாரி தருண் கார்க் கூறுகையில், ' ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இதுவரை 20,000 முன்பதிவுகள் பெறபட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் மட்டும், 18,000 புக்கிங்குகள் பெறபட்டுள்ளது. இதில், க்ரெட்டா  SUVக்குத்தான் 75 சதவீத முன்பதிவுகள் வந்துள்ளன.' என அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு முடிந்தவுடன் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அறிமுகமான முதல் மாதத்திலேயே 6,703 புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கு முடிந்தவுடன் மாதத்திற்கு 10,000 க்ரெட்டா SUV-விகளை அனுப்புவதற்கு திட்டமிடபட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா SUVயானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144nm டார்க் திறனையும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 242nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250nm டார்க் திறனையும் வழங்குகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது ரூ.9.99 லட்சம் என்ற விலையில் தொடங்குகிறது. புதிய க்ரெட்டா SUV மாடலின் BS-6 டீசல் மாடல்க்கு மட்டுமே 55 சதவீத புக்கிங் வந்துள்ளதகா ஹூண்டாய் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக