Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கணித்து சொல்லும் சாதனம் - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு!


சென்னை ஐ.ஐ.டி. புதிய கண்டுபிடிப்பு
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தவும், கண்டறியவும் பல புதுமையான தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் இந்தியா உட்படப் பல உலக நாடுகள் அனைத்திலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி. கொரோனா தடுப்பு பணிக்கான கண்டுபிடிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தற்பொழுது ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. புதிய கண்டுபிடிப்பு
சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ள இந்த சாதனம் பயனரின் தோல் வெப்பநிலை, இருதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறது. இதன் அடிப்படையில் கொரோனாவுக்கான அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த சாதனம் பிட்னெஸ் பேண்ட் போலவே செயல்படுகிறது.
 
மியூஸ் ஹெல்த் அப்
இந்த சாதனத்தை கைகளின் மணிக்கட்டில் வாட்ச் போல கட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். புளூடூத் இணக்கத்துடன் 'மியூஸ் ஹெல்த் அப்' என்ற செயலியின் உதவியோடு இந்த சாதனம் இயக்கப்படுகிறது. மேலும் ஆரோக்கிய சேது செயலியின் அறிவிப்புகளையும் பெற முடியும். டாக்டர்கள் தொலைதூரத்திலிருந்தவாறு நோயாளிகளின் உயிரணுக்களைக் கண்காணிக்க முடியும். தூங்கும் நேரத்தைத் தானாகவே கண்காணிக்கும்.
எச்சரிக்கை விதிக்கும் சாதனம்
எத்தனை அடி நடந்து சென்றிருக்கிறார்கள்?. கலோரி அளவு, நடந்த தூரம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும். பயன்படுத்துபவர்களின் உயிரணுக்கள் ஆபத்தான நிலைக்குச் சென்றால் உடனடியாக அவசர மீட்பு முறைக்குத் தானாகவே எச்சரிக்கை விடுக்கும்.உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ, ஏதாவது சிக்கல்களைச் சந்தித்தாலோ பயனாளிகள் அவசர எச்சரிக்கை விடுக்கலாம்.
விலை என்ன?
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்றால், பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும். புது தொழில்நுட்ப கருவியின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்டமாக கொரோனா அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த அதிநவீன சாதனம் ஜூன் மாத இறுதிக்குள் ரூ.3,500 என்ற விலையில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் பயன்பாட்டுக்காக சுமார் 70 நாடுகளில் இந்த கருவி விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக