தமிழகத்தில் இன்று முதல் சென்னை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனை அடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமசாமியாபுரம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மதுபானங்கள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது லாரியிலிருந்து மதுபானங்களை இறக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் லாரியை வழிமறித்து நின்று போராட்டம் நடத்தியதால் மது பாட்டிலுடன் வந்த லாரி திரும்பி சென்றது என்பது குறிப்பிடதக்கது. இதேபோல் மற்ற பகுதியில் உள்ள பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மது எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
ஆனால் ஒருபக்கம் மதுவை எதிர்க்கும் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தாலும் மதுக்கடைகள் திறந்ததும் நீண்ட வரிசையில் நின்று மது வாங்குவதும் அதே பொதுமக்களில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக