Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 மே, 2020

இணையத்தை கவர்ந்த குரங்கின் புன்னகை நன்றி புகைப்படம் - மானுடம் மனிதனுக்கானது மட்டும் அல்ல!

முடங்கியிருக்கும் உலகில் குரங்கு ஒன்று தனக்கு உணவு தந்தவருக்கு செலுத்திய புன்னகை நன்றி இணையத்தை உலுக்கும் புகைப்படமாக வலம் வருகிறது. 

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கதி கலங்கி இயங்காமல் நின்று கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை, உணவில்லா தவிப்பு மற்றும் பல இடங்களில் ஊரடங்கு என அனைத்துலகும் முடங்கியுள்ளது. 

இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு சில தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உணவு பொருள்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மனிதர்களை கவனித்து கொள்ளவே பிறர் தேவைப்படுகையில், விலங்குகளை யார் கவனிப்பார்கள்? இருப்பினும், சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் விலங்குகளை தேடி சென்று உணவளிப்பதையும் வழக்கமாக தற்பொழுது செய்து வருகின்றனர். 

இந்நிலையில், வழியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரது கண்ணாடி ஜன்னல் பக்கமாய் குரங்கு சென்று நிற்க, அவர் அந்த குரங்குக்கு பழம் ஒன்றை கையில் கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்ட அந்த குரங்கு நன்றியை தனது புன்னகையால்  தெரிவிக்கிறது.

இந்த குரங்கின் புன்னகை புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் இந்த உலகம் மனித உயிர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, உயிர் வாழ வேண்டிய விலங்குகளும் இவ்வுலகத்தில் உள்ளது என நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இதோ அந்த அழகிய புகைப்படம், 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!