இனிப்பு வகைகளில் சிறு வயதினர் தவிர்த்து பெரியவர்களும் விரும்பி உண்ண கூடிய இனிப்புகளில் ஒன்று தேன் மிட்டாய். இந்த இனிப்பை எவ்வளவு கொடுத்தாலும் திகட்டாமல் உண்ணலாம். இதை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்களா வாருங்கள்.
தேவையானவை
- உளுந்தம் பருப்பு
- மைதா மாவு
- அரிசி மாவு
- சர்க்கரை
- எண்ணெய்
செய்முறை
முதலில் உளுந்தை ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அந்த உளுந்துடன் அரிசி மாவு மற்றும் மைதா ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின் கடாயில் சர்க்கரை பாகை கம்பி பதத்தில் காய்த்து வைத்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி குழைத்து வைத்துள்ள மாவை உருண்டை பொரித்தெடுக்கவும்.
அதன் பிறகு காய்த்து வைத்துள்ள சர்க்கரை பாகில் பொரித்து எடுத்துள்ள தேன் மிட்டாய் உருண்டையை போடவும். சற்று ஊறவைத்துவிட்டு தட்டில் வைக்கவும். தற்பொழுது சுவையான தேன் மிட்டாய் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக