இந்தியா உள்பட உலகம் முழுவதும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள், திரையுலகினர் ஆகியோர் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாகவும், ஏழை எளியவர்களின் பசியை போக்க டன் கணக்கில் உணவு பொருட்களையும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.
இந்தியாவிலும் அக்சயகுமார், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சிரஞ்சீவி, அஜித், விஜய் உள்ளிட்ட பலதிரையுலக பிரபலங்கள் பெரும் தொகை மற்றும் உணவு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தின் கதையை எழுதிய கதாசிரியர் இந்திய மதிப்பில் ரூ.9 கோடி கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்லார்.
உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் கொரோனாவால் தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக