Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்…குவியும் பாராட்டு

நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க  மூன்றாம் கட்டமாக வரும் மே 17 அவரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.


பொதுவாக கொரொபாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கப்பதற்காகவும் தூய்மையை நி்லைநாட்டவும் தூய்மைப்பணியாலர்களை தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னால் அவர்களைப் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் சமூதாயத்தில் பார்வை மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் தூய்மைப்பணியாளர் கால்களில் விழுந்து மலர்மாலை அணிவித்தனர்.

அதேபோல் வடக்கு டெல்லியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான இம்ரானா (32)என்பவர், கோயில்கள், குருத்வாராக்கள்,மசூதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.

இதுகுறித்து இம்ரானா கூறுமையில், நான் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கையில், அச்சகர்கள் யாரும் என்னை தடுக்க வில்லை என தெரிவித்துள்ளார். அவரது சேவைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக