Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டாங்க! – மாதவரம் மார்க்கெட்டில் கூடிய கூட்டம்!

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மாற்றப்பட்ட மாதவரம் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டமாக கூடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்பு நேற்று ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அங்குள்ள கடைகளை சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றியது மாநகராட்சி நிர்வாகம். கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ அங்காடிகள் மாதவரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டிஒல் செயல்பட்டு வருகின்றது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசின் அறிவுறுத்தல்களை காற்றில் பறக்கவிட்டு பலர் கூட்டமாக நெரிசலாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதில் பலரும் முக கவசங்கள் கூட அணியவில்லை என கூறப்படுகிறது.

இப்படியாக தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு இன்றி செயல்பட்டு வந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக ஆகிவிடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக