அமேசான் பிரைமில் வீடியோ உள்ளடக்கம்
அமேசான் பிரைம் சந்தாதாரர்களாக இருந்தால்ல், இப்போது நீங்கள் வீடியோ உள்ளடக்கத்தை மட்டுமல்ல கேம்களும் விளையாட முடியும். அமேசான்பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இந்த வகையில் அமேசான் பிரைமில் வீடியோ உள்ளடக்கத்தை மட்டுமே பார்த்து வந்த அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது வீடியோ உள்ளடக்கத்தோடு கேம்களும் விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் கேம் டெவலப்பர்கள்
அமேசான் பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு விளையாட்டு உள்ளடக்கம் கிடைப்பதோடு அதை மேம்படுத்தல்கள் மற்றும் விளையாட்டு நாணயம் போன்ற பலவற்று இலவச சலுகைகள் கிடைக்கிறது என்றாலம் இந்த முறை எப்படி செயல்படுத்துவது என்ற சந்தேகம் வரலாம். இதற்காக அமேசான் சில மொபைல் கேம் டெவலப்பர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அமேசானின் முக்கிய அதிகாரிகளான பிரைம் சந்தாதாரர்கள் சிறந்த போட்டி விளையாட்டை உருவாக்க முடியும் என அதன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அமேசான் பிரைமில் கேம்கள் விளையாட முடியும்
அமேசான் பிரைமில் நீங்கள் கேம்களை விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பிரைம் சந்தாரர்களாக இருக்க வேண்டும். அப்படி அமேசான் பிரைமில் சந்தா செலுத்தியிருந்தால், இதன் பலனை நீங்கள் அடையளாம். மேலும் இதன்மூலம் நீங்கள் இலவசமாக வீடியோ கேம்களை விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சலுகையில் பல வேடிக்கையான விளையாட்டுகளை விளையாட வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விளையாட்டுகளில் மொபைல் லெஜண்ட்ஸ்
வேர்ட்ஸ் வித் ஃப்ரெண்ட்ஸ் 2, மாஃபியா சிட்டி, பேங் பேங் உள்ளிட்ட உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2 உள்ளிட்ட பல விளையாட்டுகள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் கிராஸ் போன்ற விளையாட்டுகள்
கிராண்ட் கிராஸ் போன்ற விளையாட்டுகளும் இந்த சந்தா சலுகையில் இடம்பெறும். இந்த கேம்களை விளையாட நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அமேசான் பிரைமில் உள்நுழைய வேண்டும். அதன்பின் அமேசான் தனது உறுப்பினர்களுக்கு இந்த புதிய கேமிங் வசதியை வழங்க மைக்ரோசைட்டையும் உருவாக்கியுள்ளது என்பது இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.
அனைத்து விளையாட்டுகளையும் பட்டியலிடுகிறது
இந்த அறிவிப்பின் மூலம் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான அனைத்து விளையாட்டுகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கேம்களைப் பயன்படுத்த, அமேசான் பிரைமில் பட்டியலிடப்பட்ட விளையாட்டை உங்கள் Android அல்லது Apple தொலைபேசியிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்மைகள் பேனரைத் தட்ட வேண்டும்
இதில் பட்டியலிடப்பட்ட விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் நன்மைகள் என்ற வாசகம் காண்பிக்கப்படும் அந்த பட்டனை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும். பின் அமேசான் உள்நுழைவைக் கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். இது அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு நீங்கள் நேரடியாக அமேசான் பக்கத்திற்கு செல்வீர்கள்.
நீங்கள் அனுமதியை வழங்க வேண்டும்
அதன் உள் நுழைந்த உடன் அனுமதி என்ற வாசகத்தை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
பின் உங்கள் பிரைம் உறுப்பினர்களின் வெகுமதியை நீங்கள் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நீங்கள் உரிமைகோரல் என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு அங்கு இருக்கும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் வீடியோ கேம் விளையாண்ட தங்களது நேரத்தை செலவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக