இந்த க்யூட்டான புகைப்படங்களை பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அனைவரும் கொரோனா, கொரோனா என்று மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் ஆங்காங்கே நிகழும் க்யூட்டான விசயங்கள் மனதை கவரும் படி தான் இருக்கிறது.
தன்னுடைய குட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை கண்ட தாய் பூனை செய்திருக்கும் செயலை பாருங்கள். தன்னுடைய குட்டிப் பூனையை வாயில் கவ்விப் பிடித்தபடி தாய்பூனை நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளது.
அதனை கவனித்த, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவ குழு ஒன்று தாய் மற்றும் சேய் என இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஜெனரஸான புகைப்படங்களை பார்க்கும் போது, மனிதர்களில் மட்டும் இல்லாமல் விலங்குகளிலும் தாய்மை கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த க்யூட்டான புகைப்படங்களை பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக