Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 23 மே, 2020

ரஷ்யாமீதான தடை இந்தியா மீதும் தொடருமா?! விஸ்வரூபமாகுமா ஏவுகணை விவகாரம்?!

அமெரிக்காவானது ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதியின் படி, அந்நாடு பொருளாதார தடை விதித்துள்ள ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு பொருட்கள் வாங்கி வந்தால், பொருள் வாங்கிய நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கும். 

இந்தியாவானது, ரஸ்யாவிடம் இருந்து எஸ்.400 என்கிற 5 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, முதற்கட்ட தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 6000 கோடியை சென்ற ஆண்டு இந்தியா ரஸ்யாவிடம் செலுத்தியுள்ளது. அதன் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 37,500 கோடியாகும். 

இதன் காரணமாக அமெரிக்காவானது இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் சூழல் நிலவுகிறது. 

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறுகையில்,' அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டத்தின்படி ரஸ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீதும் இந்த பொருளாதார தடை சட்டம் தொடரும்.

அமெரிக்காவிடம் சிறந்த தொழில்நுட்பங்களும், ராணுவ தளவாடங்களும் இருக்கின்றன. அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகமானது இந்திய மதிப்பில் சுமார் 1½ லட்சம் கோடி ரூபயை ( 20 பில்லியன் டாலர் ) தாண்டியுள்ளது. என அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!