
அமேசான் ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு
நிறுவனங்களும் இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துவரும் நிலையில்
தற்போது போட்டியாக ஜியோ மார்ட் களத்தில் இறங்கியுள்ளது
முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட்
தற்போது மும்பையில் தனது சேவையை தொடங்கி விட்டதாகவும் அது விரைவில் சென்னை உள்பட
மற்ற நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த சேவையை தொடங்க வேண்டும் என
குறிப்பிட்டுள்ள 8850008000 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ்
அனுப்ப வேண்டும் என்றும் அந்த மெசேஜ் மூலம் உங்கள் பகுதியில் சேவை இருக்கிறதா
என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. சேவை இருந்தால் உடனடியாக
நீங்கள் ஆர்டர் செய்து தேவையான பொருட்களை பெற்று கொள்ளலாம்
விரைவில் ஜியோ ஆப் ப்ளே ஸ்டோரில் வெளி
வர இருப்பதாகவும் அதன் மூலம் பொருட்களை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம் என்றும்
கூறப்படுகிறது
ஜியோ மார்ட்டில் உள்ள முக்கிய அம்சம்
என்னவெனில் டெலிவரி சார்ஜ் கிடையாது, மேலும் குறிப்பிட்ட தொகையை வாங்க வேண்டும்
என்ற கட்டாயமும் கிடையாது. குறைந்தபட்சமாக எவ்வளவுக்கு வேண்டுமானாலும் பொருள்
வாங்கிக் கொள்ளலாம் மற்றும் ஆன்லைன், ஆப்லைன் வசதி உண்டு என்பதும் சிறப்பு அம்சம்
ஜியோ இந்தியா முழுவதும் சேவையைத்
தொடங்கினால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு சரியான அடியாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக