ஆனால் ஆலைகளில் வழக்கம் போல தொழிலாளர்களை காணவில்லை. அதோடு ஒரு பெரிய பிரச்சனை பட்டியலே இருக்கின்றன. அவைகளைத் தான் பார்க்கப் போகிறோம்.
தொழிலாளர்கள்
உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் கதவுகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. ஊழியர்களில் கணிசமானவர்கள், கடந்த சில வாரங்களாக லாக் டவுனில் இருந்ததால், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். எனவே தொழிலாளர்களின் ஒரு கணிசமான பகுதியினரைக் காணவில்லை.
மற்ற பிரச்சனைகள்
தொழிலாளர்கள் இல்லை என்பது ஒரு மிகப் பெரிய பிரச்சனை தான். ஆனால் அதோடு லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனையும், பண வரத்து பிரச்சனைகளும் தொழிற்சாலைகளின் இயக்கத்தை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. இவைகளை எல்லாம் தாண்டி நம் எப்படி தொழிலை நடத்தப் போகிறார்கள் என்பதை தொழில்முனைவோர்கள் தான் சொல்ல வேண்டும்.
தொழிலதிபர்கள் கருத்து
பெரிய கம்பெனிகளுக்கு கூட, ஏப்ரல் - ஜூன் காலாண்டு மிகவும் மோசமாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள் தொழிலதிபர்கள். சிறு குறு தொழில் செய்பவர்கள் அதை விட கொடுமையான சூழல்களுக்கு தள்ளப்படுவார்கள் எனவும் சொல்லி இருக்கிறார்கள். சரி துறைவாரியாக என்ன பிரச்சனைகளை சந்திக்கிறது இந்திய தொழில் துறை..? ஒரு பார்வை பார்த்துவிடுவோமா.
ரியல் எஸ்டேட்
இந்தியாவில் பருவ மழை தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில், போதுமான தொழிலாளர்கள் இல்லாதது மிகவும் சிக்கலான விஷயம். கட்டுமான சைட்டில் இருப்பவர்களை மட்டுமாவது பணம் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களுக்கான மூல பொருட்கள் எல்லாம் சரியாக கைக்கு கிடைக்கும் என நம்புவோம் என்கிறார்கள் கட்டுமான துறையினர்கள்.
ஏற்கனவே செய்யும் வேலையில் நல்ல தேர்ச்சி இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருப்பதால், இப்போது பணியாளர்களுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் தொழிலாளர் செலவுகள் அதிகரிக்கும். அதோடு பொருட்கள் உற்பத்தி விகிதத்திலும் இது கொஞ்ச காலத்துக்கு குடைச்சல் கொடுக்கும் எனச் சொல்கிறார்கள்.
மொபைல் ஃபோன்
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயனப்படுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு எதையாவது கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஃபாக்ஸ்கான் கம்பெனி, தன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் 10 % ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் தொழிலாளர்கள் கிடைப்பது இப்போது வரை குதிரைக் கொம்பாகவே இருக்கிறதாம். ஸ்மார்ட்ஃபோன் போன்ற துறைகளில் கூட தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சிறு குறு தொழில்கள்
எம் எஸ் எம் இ தொழில்முனைவோர்கள் நடத்தும் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, நகரத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஊழியர்களும் வந்து போவது சிரமமாக இருக்கிறது. காரணம் பொது போக்குவரத்து வசதிகள் இல்லை. அதோடு பல குட்டி கம்பெனிகள், தற்போது உற்பத்தியைத் தொடங்கினால், ஏதாவது விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என சீல் வைத்துவிடுவார்களோ எனவும் திறக்க பயந்து கொண்டு இருக்கிறார்களாம்.
உணவு தட்டுப்பாடு
இந்த கொரோனா லாக் டவுனை நடுத்தர மக்கள் பிரட், ஜாம், சாஸ், ஜூஸ்... போன்ற பேக்கெட் ஐட்டங்களை வைத்து தான் பெரிய அளவில் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உணவுத் துறையில் போதுமான தொழிலாளர்கள் இல்லாததால், சில்லறை விற்பனைக் கடைகளில் ரேக்குகள் காலியாகத் தொடங்கி இருக்கின்றன. அடுத்த 3 - 4 வாரங்களுக்கு மட்டுமே உணவு கம்பெனிகளிடம் சப்ளை செய்ய சரக்கு கைவசம் இருக்கிறது எனவும் சொல்கிறார்கள்.
சிக்கல்
இப்படி இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் தான், தொழில் துறையினர் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து, சந்தைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டி இருக்கிறது. ஆனால் எதார்த்தத்திலோ, தொழிலபதிபர்கள் தொடங்கி ஊழியர்கள், தொழிலாளர்கள் வரை படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என்று ஒழியும் இந்த கொரோனா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக