ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இதுவாகும். இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.4' இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட சதுர டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி வாட்ச் பிட்னெஸ் ட்ராக்கிங் மற்றும் இதயத் துடிப்பு கண்காணிப்பு போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சம் உள்ளமைக்கப்பட்ட பிபிஜி சென்சார் உதவியுடன் நிகழ் நேரக் கண்காணிப்புடன் செயல்படுகிறது.
ரியல்மி SpO2 கண்காணிப்பு
இந்த இதய துடிப்பு PPG சென்சார்கள் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இதயத் துடிப்பைப் பதிவு செய்து வைக்கிறது கண்காணிப்பில் வைக்கிறது. பயனருக்கு ஏதேனும் அசாதாரண இதய துடிப்பு கண்டறியப்பட்டால் உடனே பயனரை இந்த ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கிறது. பயனர்களின் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க ரியல்மி SpO2 கண்காணிப்பையும் வழங்கியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
14 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடுஇந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தில் பேட்மிண்டன், கிரிக்கெட், இன்டிரியர் ரன்னிங், அவுட்டோர் ரன்னிங், வால்கிங் மற்றும் யோகா உள்ளிட்ட 14 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. பயனரின் தூக்கத்தைக் கண்காணிக்கவும், ஸிடென்றி (sedentary) மற்றும் ஹைட்ரேஷன் (hydration) ரிமைண்டர் அம்சத்துடன் சேர்த்து மெடிடேஷன் ரிலாக்சிங் அம்சத்தையும் வழங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் போல வடிவமைப்பு
ரியல்மி வாட்சின் வடிவமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது. இந்த சாதனம் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 1.4' இன்ச் கொண்ட 320x320 பிக்சல்கள் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த புதிய சாதனம் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல், இதில் 20mm ரிமூவபிள் ஸ்ட்ராப்களுடன் வருகிறது.
ரியல்மி வாட்ச் பேட்டரி மற்றும் சார்ஜிங்
புதிய ரியல்மி வாட்ச் அண்ட்ராய்டு 5.0 மற்றும் புளூடூத் V 5.0 இணக்கத்துடன் வருகிறது. இந்த சாதனம் 160 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த சாதனம் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் செயல்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நாட்கள் வரை ஆயுள்
இதயத் துடிப்பு கண்காணிப்புடன் ஒன்பது நாள் பேட்டரி ஆயுளை இது தருகிறது. கூடுதலாக, பவர் சேவிங் மோடில் பயன்படுத்தும் பொழுது சுமார் 20 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்று ரியல்மி தெரிவித்துள்ளது.
Realme வாட்ச் / ஸ்ட்ராப் விலை
இந்த புதிய Realme வாட்ச் சாதனத்தின் விலை என்னவென்று இப்பொழுது பார்க்கலாம், ரியல்மி வாட்ச் இந்தியச் சந்தையில் ரூ.3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி வாட்சின் விற்பனை ஜூன் 5ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், ரியல்மி வாட்ச் இன் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் ஸ்ட்ராப்களுக்கு நிறுவனம் ரூ.499 என்று விலையை நிர்ணயம் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக