ஊரடங்கின் போது அலுவலகம் செல்லாமல்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களே உங்களுக்கான அடுத்த சிக்கல் ரெடி
ஆகிவிட்டது போல தெரிகிறது. வீட்டில் இருந்து Work From Home செய்யும்
தொழில்நுட்பம் சார்ந்த ஐடி ஊழியர்களுக்கு ஏற்றார் போல் தொழில்நுட்ப துறையில் சில
வரிவிதிப்பு மாற்றம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.
குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவை
குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும்
தேவையான மாற்றங்கள் என அனைத்தையும் தெளிவாக விரிவாகக் கூறுமாறு அரசாங்கம்
தொழில்துறை பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனம்
மற்றும் ஊழியர்களுக்கான சில மாற்றங்களை எப்படியானதாக இருக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறது, யாரும் காலத்தில் ஐடி தொழில்துறை எப்படிப்பட்டதாக மாறும் என்று
தெரிந்துகொள்ளுங்கள்.
மாற்று வேலை நேரம்
வீட்டில் இருந்து வேலை பார்க்கும்
ஊழியர்களுக்கு தங்களின் வேலை நேரங்களை மறுவரையறை செய்ய தொழிலாளர் சட்டங்களில்
புதிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு மாற்றம்
கொரோனா தோற்று காரணமாக பெரும்பாலான
ஐடி தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதாலும், இன்னும் சிலர் தொலைதூரத்திலிருந்து
செயல்படுவதால் நாட்டின் வரிவிதிப்பு சட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வர
வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் சார்ந்த செலவில் மாற்றம்
வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது
தொழில் சார்ந்த செலவுகள் என்பதால் ஐடி சட்டங்களில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு
அவற்றை வணிகச் செலவாக மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சுகாதார
பங்குகளில் மாற்றம்
ஊழியர்கள் வேலை செய்யும் பணியிடத்தில்
உரியப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பாக
நிறுவனங்களின் பங்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
தொலைத் தொடர்பு மேம்பாட்டு மாற்றம்
ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளில்
இணைய நெருக்கடி இல்லாத விதத்தில் தொலைத் தொடர்பு மற்றும் பிராட்பேண்ட்
உள்கட்டமைப்பு சேவைகளை முட்டிலுமாக அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்று
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிரந்தரமாக வேண்டும்
பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து
வேலை செய்வதனால் அண்மையில் தொலைத் தொடர்புத் துறை பல சலுகைகளை வழங்கியது, இந்த
சலுகைகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டத்திலும் மாற்றம்
ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத்
திட்டத்திற்குப் பதிலாகத் தேசிய ஓய்வூதிய திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான
விருப்பம் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக