சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2006ல் அறிமுக இயக்குனரான சுராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் இயக்குநர் சுந்தர் சி காம்போவில் வெளியான திரைப்படம் 'தலைநகரம்'. இதில் வடிவேலுவின் நாய் சேகர் என்ற கதாபாத்திரம் மற்றும் கெட்டப் நம்மை இன்றளவும் சிரிக்க வைக்கிறது. இதில் ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ், போஸ் வெங்கட் என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
தற்போது ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துள்ளதாகவும், அதற்கு 'நகரம்' என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை சுந்தர் சி கதாநாயகனாக நடித்த 'இரட்டு' என்ற படத்தின் இயக்குனரான V. Z. துரை இயக்குவதாக கூறப்படுகிறது. மீண்டும் நாய் சேகராக வடிவேலு மற்றும் சுந்தர். சி நடிக்கும் இந்தப் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக