Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

3-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

பெரும்பாலும் எல்லோரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள் ஆகியவற்றிற்குத்தான். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு.

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்கியத்திற்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதி.

மகிழ்ச்சிக்கும், இனிமையான, திருப்திகரமான திருமண உறவிற்கும் சுக்கிரனின் அருள் அவசியம். அழகு, வசீகரம், பகட்டான வாழ்வு, அதிர்ஷ்டம் அனைத்திற்கும் சுக்கிரனின் பார்வையே காரணம். ஆகவே காதலில் சிக்கல் உள்ளவர்கள் சுக்கிரனுக்கு சில பரிகாரங்களை செய்தால் எளிதில் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

லக்னத்திற்கு 3-ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு சுக வாழ்வு மற்றும் சொகுசு வாழ்வு உண்டாகும்.

3ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 துணிச்சல் மிக்கவர்கள்.

👉 சாதனைகள் படைப்பவர்கள்.

👉 வசதி வாய்ப்பு உண்டாகும்.

👉 தைரியம் மிக்கவர்கள்.

👉 புத்திசாலித்தனம் மிக்கவர்கள்.

👉 பேச்சுத்திறமை உடையவர்கள்.

👉 கற்பனை வளம் கொண்டவர்கள்.

👉 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 இளைய சகோதரி பிறப்பு உண்டாகும்.

👉 வினோத மனப்பான்மை உடையவர்கள்.

👉 எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.

👉 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.

👉 ஏற்ற, இறக்கமான பொருளாதார நிலை கொண்டவர்கள்.

👉 சிலர் தங்களது சகோதரர்களைப் பறிகொடுக்க நேரிடும்.

👉 அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக