கொரோனா தோற்று காரணமாகப் பள்ளி சிறுவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சாதனங்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனின் ஆன்லைன் வகுப்புக்காக அவரது பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு நேரம் போக, ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்க்கத் துவங்கியிருக்கிறான் அந்த சிறுவன்.
மாணவிக்கு நேர்ந்த அவலம்
அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை இந்த சிறுவன், மற்ற இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் தாய் இறந்துவிட்ட காரணத்தினால் அவரின் தந்தை தன்னுடைய தங்கையுடன் சேர்ந்து மகளை வளர்த்து வருகிறார். இவர்கள் குடியிருந்த வாடகை வீட்டின் கீழ்ப்பகுதியில் தான் வீட்டு உரிமையாளரும் அவரின் 10 ஆம் வகுப்பு மகனும் தங்கியிருக்கின்றனர்.
இன்னொரு சிறுவனுக்கும் பழக்கத்தை பழக்கிவிட்ட சிறுவன்
வீட்டில் இருக்கும் அனைவரும் வேலைக்குச் சென்றுவிடுவதனால், சிறுமி கீழே சென்று டிவி பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்ப்பதைப் பழக்கமாக வைத்துள்ள சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு சிறுவனும் அந்த பழக்கத்தை அறிமுகம் செய்திருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாததினால் அந்த சிறுவனும் இவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து ஆபாச படங்களைப் பார்த்திருக்கிறார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்
இது தொடர்ந்து நடந்துவர, சம்பவ தினமான மே 20ம் தேதி அன்று சிறுமி டிவி பார்க்க கீழே சென்றிருக்கிறார். இரண்டு சிறுவர்களும் சேர்ந்து சிறுமியையும் ஆபாச படம் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். இதை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர். இந்த இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து மற்றொரு சிறுவனும் இணைந்துள்ளான்.
சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலிமூன்று சிறுவர்களும் சேர்ந்து அந்த சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சிறுவர்கள், சிறுமியைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. மருத்துவமனைக்குச் சென்றபோது தான், அந்த சிறுமி நடந்ததை பற்றி மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு தான் சிறுமியின் வீட்டினருக்கும் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த மூன்று சிறுவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெயரின் கீழ் இரண்டு சிறுவர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக