மேலும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய இரு வகைகளுக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலாக சாம்சங் கேர்+ மீதான சலுகையும் அணுக கிடைக்கும். பின்பு ஸ்மார்ட்போன் சேதம் மற்றும் லிக்விட் சேடஹ் போன்ற பாதிப்பாலுக்கான தொகுப்பை ரூ.1,099 க்கு பதிலாக வெறும் ரூ.699 பெறலாம். கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா உள்ளிட்ட முக்கிய
ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை
பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500-வரை கேஷ்பேக் கிடைக்கும். மேலும் டிக்கையாளர்கள் மேம்படுத்தல் சலுகையுடன் ரூ.1500 என்கிற அப்கிரேட் போனஸ்ஸையும் பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ51 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
டால்பி அட்மோஸ்
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.
நான்கு கேமராக்கள்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
4000எம்ஏஎச் பேட்டரி
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை,
வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக