ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளின் படி, பந்தில் எச்சில் தடவி பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் எனவும், இது ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பல நாடுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது ஐசிசி புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டெஸ்ட் போட்டியின்போது வீரருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை போட்டி நடுவரே தேர்வு செய்வார். அதுமட்டுமின்றி, வீரர் பழக்க தோஷத்தில் எச்சிலை ஒரு முறை பந்தில் தடவினால், நடுவர்கள் மன்னித்துவிடுவர். ஆனால், பவுலிங் அணியினர் இருமுறைக்கு மேல் எச்சிலை தடவினால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். இந்த விதிமுறை, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
சர்வதேச போட்டிகளின் பொது, நடுவர் முறை தற்காலிகமாக கைவிடப்பட்டு, ஐசிசி அங்கீகரித்த உள்ளூர் நடுவர்களும், நிர்வாகிகளுமே அந்தந்த போட்டியை நடத்துவர். இந்த புதிய விதிமுறைகள், ஜூலை 8 முதல் இங்கிலாந்து-மேற்கிந்திய அணிகளுக்கு இடையான போட்டியில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக