Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூன், 2020

மணல் கொள்ளை குறித்து பதிவு.! பத்திரிகையாளர் சுட்டு கொலை.!

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் கங்ககாட் பகுதிக்கு அருகே மணி திரிபாதி (25) என்ற பத்திரிகையாளர் தனது நண்பருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டனர்.

இதைத்தொடர்ந்து, இவரது நண்பர் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அழைத்து சென்றார். ஆனால், மணி திரிபாதியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திரிபாதி கம்பு மெயில் என்ற செய்தித்தாளில் வேலை செய்து வந்துள்ளார். திரிபாதி கடந்த 14 -ம் தேதி அன்று தனது பேஸ்புக்கில் பதிவு செய்த அறிக்கை காரணமாக கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில் "மணல் கொள்ளை "( land mafia) குறித்து பதிவிட்டு உள்ளார். இதனால், கோபமடைந்த நில அபகரிப்பாளர்கள் பழிவாங்கும் விதமாக திரிபாதியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  மேலும், இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக