மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு ஆக இருக்கும் நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் ஜெஈஈ மெயின் பெயர்களை ஒத்தி வைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும் இந்த தேர்வுகளை வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு வகையான தேர்வுகள் இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நீட் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக