ஸ்மார்ட்போன்களை
காவு வாங்கும் ஒரு புதிய வால்பேப்பர் புகைப்படம் வலைத்தளங்களில் மிகவும் வேகமாக
வைரல் ஆகி வருகிறது. மெட்ராஸ் படத் தோரணையில், சுவரைத் தொட்டவர்கள் நிச்சயம் காவு
வாங்கப்படுவார்கள் என்பது போல, இந்த அழகான படத்தை வால்பேப்பரில் வைப்பவர்களின்
ஸ்மார்ட்போன் முற்றிலுமாக செயல் இழந்து காவு வாங்கப் படுகிறது. இதற்குப் பின்னால்
உள்ள காரணம் என்ன என்று பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களை காவு
வாங்கும் வால்பேப்பர்
வால்பேப்பராக
ஒரு புகைப்படத்தை செட் செய்தால் ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி கிராஷ் ஆகும், இது
நம்புற மாதிரி இல்லையே என்று உங்களில் சிலர் யூகித்து இருக்கலாம். ஆனால்,
உண்மையில் அதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த
வால்பேப்பரைப் முதலில் பயன்படுத்திய போது சாம்சங் போன்கள் மட்டும் தான்
செயலிழந்துள்ளது என்று Ice universe என்ற ஊடகம் தனது டிவிட்டர் பக்கத்தில்
தெரிவித்திருந்தது.
ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்களுக்கு வந்துள்ள புதிய ஆபத்து
ஆனால்,
இந்த புகைப்படம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மற்ற ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்களையும் தாக்கியுள்ளது என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் செயலிழக்கக் காரணம் என்ன என்று
ஆராய்ந்த போது, உண்மை தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணம் இந்தப்
புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் color profile தான் என்று
கூறப்படுகிறது.
அதிக பாதிக்கப்பட்ட
ஸ்மார்ட்போன்கள் இது தான்
இந்த
இயற்கை அழகு கொஞ்சும் அழகிய புகைப்படத்தில், கூகுளின் Skia RGB ப்ரோஃபைல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காவு வாங்கும் வால்பேப்பர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழான
ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை மட்டுமே தாக்கி, செயல் இழக்கச்
செய்துள்ளது. குறிப்பாக இந்த வால்பேப்பர் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும்
எந்த ஸ்மார்ட்போனையும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் ஆண்ட்ராய்டு 11
ஸ்மார்ட்போன்கள் தாக்கப்படவில்லை
ஏன்
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை மட்டும் இந்த வால்பேப்பர்
காவு வாங்கவில்லை? ஏனென்றால், இவற்றில் தானாகவே இந்தப் புகைப்படத்தின் கலர்
ப்ரொபைலை sRGB (Standard Red Green Blue) வடிவத்திற்கு மாற்றக் கூடிய விருப்பம்
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஆண்ட்ராய்டு 11ல்
இயங்கும் ஸ்மார்ட்போன்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரை செய்யும்
மொபைல்கள் கிராஷ்
ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழ்
உள்ள வெர்ஷன்களில் இந்த கலர் ப்ரொபைல் தானாக மாற்றம் செய்யப்படுவதில்லை, இதனால்,
இந்தப் புகைப்படத்தை வால்பேப்பராக செட் செய்யும் பயனர்களின் ஸ்மார்ட்போனில்
சாப்ட்வேர் கோளாறு ஏற்பட்டு அவர்களின் மொபைல் கிராஷ் ஆகிவிடுகிறது என்று டைய்லான்
ரவுசல் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வால்பேப்பர் தான் வேணும்னா இதை செய்யுங்கள்
இப்படி பிரச்சனைகள் இருக்கிறது என்று
தெரிந்தும் இந்த வால்பேப்பரைக் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று
நினைப்பவர்கள், முதலில் புகைப்படத்தின் ப்ரோபைலை sRGB கலர் ப்ரோஃபைலுக்கு மாற்றி
விட்டுப் பயன்படுத்தினால் எந்த கோளாறும் இல்லாமல் தப்பித்துவிடுவீர்கள். அப்படிச்
செய்யாமல், இதை வால்பேப்பராக பயன்படுத்தினால் கட்டாயம் உங்கள் ஸ்மார்ட்போன் கிராஷ்
ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரீசெட் தான் செய்தாக வேண்டும்
இதில் உள்ள மிக மோசமான விஷயம் என்ன
வென்றால், கலர் ப்ரோபைலை மாற்றம் செய்யாமல் இந்த வால்பேப்பரை பயன்படுத்தி கோளாறு
ஏற்பட்டால் அதைச் சரி செய்யப் பயனர்கள் கட்டாயம் மொத்தமாக போனை ரீசெட் தான்
செய்தாக வேண்டும். அப்படிச் செய்யும் பொழுது உங்கள் போனில் இருக்கும் அனைத்து
தகவல்களும் அழிந்து விடும். இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளங்கள் மூலம்
அனைவருக்கும் பகிரப்பட்டு வருகிறது, எனவே உஷாராக இருந்துகொள்ளுங்கள்.
சேலஞ் என்ற பெயரில் துரத்தும் விபரீதம்
இன்னும் சிலர் இதை வேடிக்கையான விஷயம்
என்று கூறி சேலஞ் என்ற பெயரில் இந்த புகைப்படத்தை ட்ரை செய்யத் தூண்டுகின்றனர்.
விஷயம் தெரியாமல் விபரீதத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இன்னும் சிலர், அதெப்படி
ஒரு போட்டோ ஸ்மார்ட்போனை காவு வாங்கும், கிராஷ் ஆகச் செய்யுமென்று முயற்சி செய்து
அவதிப்பட்டிருக்கிறார்கள். ஆகையால், ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த படத்தை மொபைலில்
பதிவிறக்கம் செய்து ட்ரை செய்யாமல் இருப்பது பாதுகாப்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக