Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 17 ஜூன், 2020

இன்று முதல் எல்லைகள் சீல்.! இ-பாஸ் இருந்தாலும் அனுமதி இல்லை .!

சென்னையில் இருந்து இ பாஸ் கொண்டு வந்தாலும் புதுவைக்குள் அனுமதி இல்லை என  முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வருகின்ற 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து இ பாஸ் கொண்டு வந்தாலும் இனி புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அப்படியே வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள். இன்று முதல் கடலூர், விழுப்புரம் எல்லைகள் சீல்வைக்கப்படும். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவி தவிர வேறு யார் வந்தாலும் விடமாட்டோம் என கூறியுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் புதுச்சேரி கொரோனா தொற்று அதிகரிக்கிறது. அதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!