உருளைகிழங்கு சாறு
ஏற்கனவே இதை கருவளையத்துக்கு பயன்படுத்துவது குறித்து பார்த்திருக்கிறோம். இதை வட்டமாக நறுக்கி கண்களில் தேய்க்கலாம், சாறாக்கி கண்களை சுற்றி தடவலாம், கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது பற்று போடலாம். இப்படி பல குறிப்புகளை கொடுத்திருக்கிறோம். இதை தனியாக பயன்படுத்தினாலே பலன் உண்டு.
ஆனாலும் உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் மற்ற கலவையோடு இணைத்து பயன்படுத்தும் போது அனைத்து சத்துக்களும் கிடைக்கவே செய்யும். ஃப்ரெஷ்ஷான உருளைக்கிழங்கை தோல் நீக்கி சாறு பிழிந்து எடுக்கவும்.
தேவை - அரை தேக்கரண்டி சாறு
தக்காளி சாறு
தக்காளியை சருமத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அவை தரும் நன்மைகள் என்ன என்பதையும் பார்த்திருக்கிறோம். தக்காளியில் இருக்கும் சத்து முகத்தில் இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவுகிறது. அமிலத்தன்மை கொண்டிருக்கும் தக்காளி சருமத்தை பொலிவேற்ற உதவுகிறது. தக்காளி சாறு கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை போக்குவதோடு அந்த கருவளையம் தரும் கருமை நிறத்தையும் போக்க உதவுகிறது. நன்றாக பழுத்த தக்காளியை சுத்தமாக ஓடும் நீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்து சாறு எடுக்கவும். சாறை வடிகட்டி கொள்வது கூட சிறந்தது. ஆனால் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
தேவை - அரை தேக்கரண்டி தக்காளி சாறு
வெள்ளரிக்காய்
கண் சோர்வை நீக்குவதில் முதலிடம் இதற்கு தான் உண்டு. கண்களின் கீழ் உண்டாகும் கருமை முதல் கண் இரப்பை வீக்கம், கண் சோர்வு அனைத்தையும் மீட்டு கண்களை குளிர்ச்சியாக வைக்க உதவும். வைட்டமின் சி நிறைந்த வெள்ளரிக்காய் நீர்ச்சட்து கொண்டிருக்ககூடியது இதை தோல் சீவ வேண்டியதில்லை. ஃப்ரெஷ்ஷான வெள்ளரியை அப்படியே நறுக்கி நீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். ஓய்வாக இருக்கும் போது வெள்ளரியை வட்டவடிவில் வெட்டி கண்களின் மீது வைத்தால் கூட போதுமானது.
தேவை - அரை தேக்கரண்டி வெள்ளரிச்சாறு
கேரட் சாறு
கேரட் எப்படி உடலுக்கு சத்து தருகிறதோ அதே அளவு கண்ணுக்கும் சருமத்துக்கும் போதிய ஊட்டச்சத்து தருகிறது. சருமத்தின் நிறத்தை மாற்றும் சக்தி கேரட்டுக்கு உண்டு. இவை சருமத்தின் மூன்று அடுக்கு வரை உள்ளே சென்று சுத்தம் செய்யகூடியது. பொலிவும் புத்துணர்ச்சியும் தரும் கேரட் முகத்துக்கு ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்துவது உண்டு. இதை சாறாக்கி பயன்படுத்தினாலும் பலன் கிடைக்கும். ஃரெஷ்ஷான கேரட்டை தோல் சீவி நீர்விடாமல் அரைக்கவும்.
தேவை - அரை தேக்கரண்டி கேரட் சாறு
ரோஸ் வாட்டர்
நறுமணமிக்க ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து முன்னரே பார்த்திருக்கிறோம். அழகு குறித்த அத்தனை பராமரிப்பிலும் இவை நீக்கமற நிறைந்திருக்கிறது. முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்தை பளிச் என்று வைக்க உதவும் ரோஸ் வாட்டர் அனைத்து அழகு குறித்த பராமரிப்பிலும் பயன்படுத்தலாம்.
தேவை - அரை தேக்கரண்டி கேரட் சாறு
மேற்கண்ட அனைத்து சாறுகளையும் ஒன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவி சுத்தமான துணியில் இந்த சாறை ஊறவைத்து கண்கள் கண்களின் கீழிருக்கும் கருவளையம் கண்களை சுற்றி என வைக்கவும். 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு வாரம் செய்தாலே கருவளையம் நிச்சயம் மறைந்திருக்கும்.
ஒவ்வொன்றையும் தனித்தனியாக பயன்படுத்துவதை விட ஒன்றாக பயன்படுத்தினால் அனைத்தின் சத்தும் மொத்தமாய் கண்களுக்கு கிடைக்கும். கருவளையம் இல்லாமலும் இதை பயன்படுத்தலாம். கண்கள் புத்துணர்ச்சியாக பொலிவாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக