அறிவழகன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான வெற்றி படமான ஈரம் படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, நண்பன் ஆகிய படங்கள் ஹீரோகளாக நடித்தவர்களின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களாகவே கருதப்படுகிறது. இவர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இவர் படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் உள்ளார். அதில் காதல், 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களை கூறலாம்.
அவ்வாறு அவர் தயாரித்து வெற்றியடைந்த படங்களில் ஒன்று தான் ஈரம். ஆதி நடிப்பில் உருவான இந்த படம் ஒரு திகில் கலந்த பேய் படமாக இருந்தது. சந்தேகம் காரணமாக மனைவியை கொன்ற கணவன், தனது மரணத்திற்கு காரணமானவர்களை அந்த பெண்ணின் ஆவி நீர் மூலமாக பழி வாங்குவதே படத்தின் கதை. அறிவழகன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துள்ளதாகவும், ஷங்கர் தயாரித்தால் மட்டுமே படத்தை இயக்குவேன் என்றும் அறிவழகன் கூறியுள்ளார். இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஊரடங்கு முடிந்த பிறகு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக