திருமணமாகாத விரக்தியில் காவல்ர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியாகியுள்ள செய்து மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நேற்று மூன்றடுக்கு குடியிருப்பு ஒன்றிலிருந்து காவலர் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை தற்கொலைக்கு முயன்றவரிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் தற்கொலை எண்ணத்தை மாற்றி கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கீழே மெத்தைகளை விரித்து அவருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தற்கொலைக்கு முயன்ற காவலரின் நண்பர்கள் வந்து அவரை அப்படியோ சமாதானம் செய்து தற்கொலை முயற்சியில் இருந்து பின்வாங்க வைத்துள்ளனர். விசாரணையில் அவர் திருமணம் சார்ந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக