துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டு துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு 125 டாலர்கள் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் சில நாடுகளில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் துபாயில் கடந்த 27ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு, ஏற்கனவே வெளியாகி இடையில் நின்று போன பல படங்களை வெளியிட்டனர்.
அப்போது பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களை வெளியிட்டு 1 ஆயிரம் முதல் 2ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வரை வசூலித்ததாம். அதே போல துல்கரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை மீண்டும் துபாயில் உள்ள தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த படம் 125 டாலர்கள் மட்டுமே வசூல் செய்ததாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் சிலர் தொற்று பயத்தால் திரையரங்குகளில் வர பயப்படுகின்றனர். எனவே மீண்டும் உலகம் நோய் தொற்று இன்றி இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே சினிமாயுலகம் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக