Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

ஸ்மார்ட் நகரமாகும் கோவை: என்னவெல்லாம் வருதுன்னு பாருங்க!

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கி.மீ தொலைவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.
நிகழ்வுக்குப் பின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “40.70 கோடி ரூபாய் மதிப்பில் பந்தய சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விளையாட பூங்காக்கள், திறந்தவெளி திரையரங்கம், நடைபாதை சிற்றுண்டிக் கடைகள், சிந்தடிக் மைதானம், அதிநவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இலவச வைஃபை, வாகனங்கள் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி, நிழற் குடைகள், அதிநவீன கண்காணிப்பு கேமரா போன்ற வர உள்ளது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் முதலமைச்சர் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இதனால் கோவை மாவட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்பொழுது எட்டியுள்ளது” என்று முதல்வருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.

அதே சமயம் முந்தைய அரசை விமர்சிக்கவும் செய்தார். “கோவையில் இதற்கு முன்பிருந்த அரசு இது போன்ற எவ்வித நலத்திட்டங்களையும் செய்ததில்லை. தற்பொழுது இது போன்ற பல வசதிகள் செய்து வருவது பொறுக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன” என்று பேசினார்.

கொரோனா பரவல் குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவையில் வைரஸ் தொற்று மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக