Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 30 ஜூன், 2020

மின்னல் தாக்கியவர்களை குணப்படுத்த மாட்டு சானத்தில் புதைத்த கொடூரம்!!

மின்னல் தாக்கியவர்களை குணப்படுத்த கிராம மக்கள் மாட்டு சானத்தில் புதைத்து வைத்ததால் இருவர் உயிரிழப்பு..!

சத்தீஸ்கரில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் ஜாஷ்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதால், பாதிக்கபட்டவர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஒரு பெண் உட்பட மூன்று பேரை சில கிராமவாசிகள் மாட்டு சாணத்தில் புதைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாவட்டத்தின் பாக்பஹார் கிராமத்தில் நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஜாஷ்பூர் துணை பிரதேச போலீஸ் அதிகாரி ராஜேந்திர பரிஹார்-PTIயிடம் தெரிவித்துள்ளார்.

"தீக்காயங்களை குணப்படுத்தும் சக்தி மாட்டு சாணத்திற்கு இருப்பதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நம்புகின்றனர்," என்று அவர் கூறினார்.

பின்னர், வேறு சில கிராமவாசிகள் தலையிட்டபோது, பாதிக்கப்பட்ட மூன்று பேரும் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் இருவர் - சுனில் சாய் (22) மற்றும் சம்பா ரவுத் (20) ஆகியோர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்த மற்ற நபர், 23 வயது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், என்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, இறந்தவரின் உறவினர்களுக்கு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!