Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 30 ஜூன், 2020

'தும்பி துள்ளல்' கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இதோ.!

சியான் விக்ரம் அவர்களின்  கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

விக்ரம் தற்போது  நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற அழகான பாடல் வெளியாகியுள்ளது. விவேக் மற்றும் ஜிதின் ராஜ் வரிகள் எழுத ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ரேயா கோஷால் மற்றும் நகுல் அபயங்கர் பாடியுள்ளனர்.தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!