கொரொனா தொற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நமக்கு தினமும் பல வழிகளில் பல தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதுவரை, நம்மை பாதுகாத்துக்கொள்ள, மிகப்பெரிய ஆயுதங்களாக ஃபேஸ் மாஸ்குகளும் (Face mask), கிருமி நாசினிகளும் (Sanitizer) பெருமளவில் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் ஃபேஸ் ஷீல்ட்டை பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். இது தவிர, விமானங்களில் பயணிப்பவர்கள் மாஸ்குகளுக்கு பதிலாக இந்த முகக்கவசங்களை பயன்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம். ஃபேஸ் ஷீல்ட் பற்றிய பயனுள்ள சில முக்கியமான தகவல்களைக் காணலாம்.
கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட பின்னர், சமூக ஊடகங்களில் பலவிதமான வினோத முகக்கவசங்களின் படங்களை நாம் கண்டோம். தண்ணீர் பிடிக்கும் ஜக்குகளைக் கூட சிலர் கவசமாகப் பயன்படுத்திய படங்களும் உலா வந்தன. ஆனால், சில நாட்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் இதே போன்ற பிளாஸ்டிக் முகக்கவசங்கள் பயன்படுத்துவதைக் கண்டோம். இருப்பினும், நம்மில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுநோயைத் தடுக்க இன்னும் சாதாரண ஃபேஸ் மாஸ்குகளையே பயன்படுத்தி வருகிறோம்.
முகக்கவசத்தின் முக்கியத்துவம்
2014 இல் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து சரியாக 18 அங்குல தூரத்தில் முகக்கவசம் அணிந்த மற்றொரு ஆரோக்கியமான நபர் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட்து. மிகவும் நெருக்கமாக இருந்துகொண்டு இரும்பிய போதும், தொற்று பரவாமல் தடுப்பதில், 96 சதவீதம் வரை முகக்கவசம் வெற்றி பெற்றது என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வு முகக்கவசம் என்று குழந்தைகளுக்கான தொற்று நோய் நிபுணர் டாக்டர் பிராங்க் ஆஸ்பர் கூறுகிறார். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் தொற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி முகக்கவசம் என்பது பல வழிகளில் தெரிய வந்துள்ளது.
பாதுகாப்புக்கு உகந்தது முகமூடியா அல்லது முகக்கவசமா?
நீங்கள் அதிக நெரிசலான இடத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், முகமூடிக்கு பதிலாக முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஃபேஸ் மாஸ்க் அணிந்திருந்தாலும், நாம் நமது கை வாய் மற்றும் கண்களைத் தொடும் வாய்ப்புள்ளது. ஆனால் ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகக்கவசத்தை அணிவதன் மூலம் பலவிதமான ஆபத்துகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், ஃபேஸ்ஷீல்டுகள் முகத்தின் பெரும் பகுதியை மூடி விடுவதால், நாம் நம்மை அறியாமல் முகத்தின் எந்தப் பகுதியையும் தொடும் சாத்தியக்கூறுகள் குறைந்து விடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக