Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூன், 2020

தட்டித் தூக்கிய ஜியோ... மண்ணைக் கவ்விய வோடஃபோன் ஐடியா!

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 2016ஆம் ஆண்டில் தனது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனத்தை இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் அறிமுகம் செய்தார். வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்போடு களமிறங்கியதால் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஜியோவுக்குப் படையெடுத்தனர். பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய ஜியோ, தனது சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரித்ததோடு, அதிக லாபம் ஈட்டவும் ஆரம்பித்தது. இதனால் ஏர்டெல்,வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
புதிய வாடிக்கையாளர்களை சேவையில் இணைப்பதில் ஜியோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்துக்கான நெட்வொர்க் சேவை விவரங்களைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 62.57 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை சேவையில் இணைத்த நெட்வொர்க் நிறுவனமாக ஜியோ முன்னிலை வகிக்கிறது. வயர்லெஸ் பிரிவில் 38.28 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் புதிதாக 38.28 கோடிப் பேரைத் தனது சேவையில் இணைத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த மொபை சந்தாதார்கள் எண்ணிக்கை தற்போது 32.90 கோடியாக உள்ளது. பொதுத் துறை நெட்வொர்க் நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 4.39 லட்சம் சந்தாதார்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆனால், இதே காலத்தில் வோடஃபோன் - ஐடியே நெட்வொர்க் 34.67 லட்சம் சந்தாதார்களைக் கோட்டைவிட்டுள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் சந்தையிலும் இந்நிறுவனம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சந்தாதார்கள் அடிப்படையிலான சந்தையில், 32.9 சதவீத சந்தைப் பங்குடன் ஜியோ முன்னிலை வகிக்கிறது.
28.35 சதவீதப் பங்குகளுடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 28 சதவீத சந்தைப் பங்குடன் வோடஃபோன் - ஐடியா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக