Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூன், 2020

நேரடியாக OTTயில் யோகி பாபுவின் காக்டெயில்! ரிலீஸ் தேதி இதுதான்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் யோகி பாபு அவர் தான் தற்போது அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் காமெடியன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சோலோ ஹீரோவாகவும் பல காமெடி படங்களில் நடித்தும் வருகிறார்.

ஜீ5 தளத்தில் வரும் ஜூலை 10ம் தேதி காக்டெயில் படம் ரிலீஸ் ஆகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆர்.ஏ.விஜயமுருகன் இயக்கியுள்ள காக்டெயில் படத்தில் யோகி பாபு ஒரு ஆஸ்திரேலிய பறவையான காக்டெயில் உடன் நடித்து உள்ளார்.

படத்தில் யோகி பாபு உடன் ரேஷ்மி கோபிநாத், மைம் கோபி, ஷாயாஜி ஷிண்டே, கவின், மிதுன் மகேஸ்வரன், வெட்டுக்கிளி பாலா, ஸ்வாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சாய் பாஸ்கர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காக்டெயில் படத்தின் டீஸர் வெளிவந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று இருந்தது. இந்த படத்தில் யோகி பாபுவின் பெயர் டான். எந்த ஏரியாவுக்கு என கேட்டால்.. அது எல்லாம் இல்லை.. என் பெயர் மட்டும் டான் என்று தான் பதில் சொல்வார் யோகி பாபு.

ஒரு ஐம்பொன் சிலையை கடத்தும் கூட்டம், சிலை கடத்துபவர்களை பிடிக்க தீவிரமாக காத்திருக்கும் போலீஸ் என படத்தின் மொத்த கதையும் அந்த முருகன் சிலையை மையப்படுத்தி தான் இருக்கும் என தெரிகிறது. யோகி பாபுவும் அவரது நண்பர்களும் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அவர்கள் காக்டெயில் உதவியுடன் எவ்வாறு அதில் இருந்து தப்பித்தார்கள் என்பது தான் படத்தில் காட்டப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

சமீப காலத்தில் பல படங்கள் ஓடிடி ரிலீஸ் ஆகி வரும் சூழ்நிலையில் தற்போது அந்த பட்டியலில் யோகி பாபுவின் காக்டெயில் படமும் இணைந்துள்ளது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஆகிய படங்கள் மட்டுமே தற்போது வரை நேரடியாக ஒடிடி ரிலீஸ் ஆகியுள்ளன. அவற்றுக்கு ரசிகர்கள் மத்தயில் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக