Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஜூலை, 2020

சீனாவுக்கு 'நோ'.. சிங்கப்பூர் நிறுவனத்திடம் 100 மில்லியன் டாலர் முதலீடு பெற சோமேட்டோ திட்டம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு ஈட்ட திட்டமிட்டு சில வாரங்களுக்கு முன் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் முதலீட்டு நிறுவனமாகச் செயல்படும் Ant பைனான்சியல் நிறுவனத்திடம் இருந்து 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையை ஈட்ட முடிவு செய்தது.

இதன் பின் இந்திய - சீன பிரச்சனை வெடித்தது, இதன் எதிரொலியாக இந்திய அரசு சீன முதலீடுகளைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடு விதிகளை மாற்றியது. இதனைத் தொடர்ந்து சோமேட்டோ தனது முடிவை மாற்றியுள்ளது.

தற்போது சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Temasek உடன் பேச்சுவார்த்தை

நாளுக்கு நாள் இந்தியா சீனா இடையேயான பிரச்சனை பெரியதாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து முதலீடு வரும் வரையில் காத்திருக்க முடியாது என முடிவு செய்துள்ள சோமேட்டோ சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek உடன் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சோமேட்டோவில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சோமேட்டோ

இந்தக் கொரோனா காலத்தில் சோமேட்டோவின் வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளதாகவும், புதிய நிறுவனமான அமேசான் உணவு டெலிவரி சேவையில் இறங்கியுள்ள நிலையில் சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதன் எதிரொலியாகவே வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சோமேட்டோ Ant பைனான்சியல் நிறுவனத்தின் முதலீட்டுக்காகக் காத்திருக்காமல் Temasek உடன் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கொரோனா

கொரோனா-வின் தாக்கம் இந்நிறுவனத்தின் லாப அளவீட்டையும், வர்த்தக அளவீட்டையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் ஏப்ரல் மாதம் மத்திய அரசு அன்னிய முதலீடு விதிகளை மாற்றியுள்ளது.

தற்போது சோமேட்டோ மற்றும் Temasek இடையிலான முதலீடு உறுதியான நிலையில், இருதரப்பு விதிகள் மற்றும் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Temasek - சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தில் 2015இல் Temasek பல்வேறு முதலீட்டாளர்கள் உடன் இணைந்து சுமார் 310 கோடி ரூபாய் முதலீடு செய்ததில் தற்போது இந்நிறுவனத்திடம் சோமேட்டோவின் 3 சதவீத பங்குகள் உள்ளது.
இன்றைய மதிப்பில் சோமேட்டோவின் மதிப்பு 3 பில்லியன் டாலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!