பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 17 வயது சிறுமியின் 25 வார கர்ப்பத்தை கலைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி. 17 வயது நிரம்பிய சிறுமி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிலையில், தற்போது அந்த சிறுமி 25 வார கர்ப்பிணியாக உள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் தந்தை, தனது குழந்தையின் கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார் மற்றும் குற்றவாளி மீது மும்பை வகோலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.டேடட் மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகியோரின் அமர்வின் போது விசாரணைக்கு வந்த நிலையில், 25 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக