Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

காதல் திருமணம் செய்த இளைஞர்.. தாய் உட்பட இருவர் வெட்டி கொலை! 3 பேர் கைது!

தூத்துக்குடி அருகே உள்ள சிவகளையில் மகனின் காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் தாய், உட்பட இருவர் வெட்டி கொன்ற வழக்கில், 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 42). இவர்களுக்கு ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் ராஜா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்கத்து ஊரான பொட்டல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர் அருண் உடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அடலாயம் தெரியாத நபர், விக்னேஷ் மற்றும் அருணை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். ரத்தம் சொட்ட சொட்ட விக்னேஷ் குமார் அந்த இடத்தைவிட்டு தப்பி, தனது வீட்டிற்கு ஓடிவந்தார்.

அங்கு வந்த அவரை அவரின் தாயார் முத்துபேச்சி மற்றும் லட்சுமணன் அவரை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் வீட்டிற்கு விரைந்த அந்த மர்மநபர்கள், வீட்டிலிருந்த இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் சம்பவ இடத்திலே அவரின் தாய் மற்றும் நண்பர் அருண் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சுமணன் மற்றும் விக்னேஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஏரல் காவல்துறையினர்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில், பெண்ணின் உறவினர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் பெண்ணின் உறவினர்களான அண்ணன் முத்துராமலிங்கம், சித்தப்பா அருணாச்சலம், முத்துச்சுடர் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!