Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

சஹானாவின் பாடலுக்கு "கோப்ரா" படக்குழுவினர் பரிசு.!

கோப்ரா பட பாடலான தும்பி துள்ளல் தனது பாணியில் கீபோர்டு மூலம் வாசித்த சஹானாவிற்கு கோப்ரா தயாரிப்பாளரால் பரிசு வழங்கப்பட்டது
விக்ரம் தற்போது  நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற அழகான பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது .
இந்த பாடலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரிகமா நிகழ்ச்சியின் மூலம் கண் பார்வையற்ற சிறுமியான சஹானா 'தும்பி துள்ளல்' பாடலை கீபோர்டு மூலம் வாசித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதற்கு ஏ. ஆர். ரஹ்மான் 'ஸ்வீட்' என்று கூறி பாராட்டியிருந்தார். அதனையடுத்து கோப்ரா பட தயாரிப்பாளரான லலித் குமார் சிறுமி சஹானாவிற்கு மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்புடன் கூடிய பரிசு ஒன்றை வழங்கி பாராட்டியுள்ளார். இதற்கு சஹானா தரப்பில் இருந்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக