கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க ளஆராய்ச்சியார்கள் ஒரு முத்திரை அளவிலான ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதில், உடல் வெப்பநிலை மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவைப் பதிவுசெய்யும் சென்சார்கள், கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் கருவியாகும் .
இதுகுறித்து, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ஏ. ரோஜர்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூறுகையில், 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், புனர்வாழ்வு நிபுணர்கள் மற்றும் நோயாளிகள் மீது இந்த சாதனத்தை பரிசோதித்ததாகக் கூறினார்கள்.
ஒரு சிறிய அளவைக் கொண்ட ஸ்டிக்கர் போன்ற இந்த மருத்துவ சாதனம் மென்மையானதாகவும், வளையக்கூடியதாகவும் உள்ளது. இந்த கருவியை தொண்டையின் அடிப்பகுதியில் வைக்கப்படுகிறது. சுவாச ஆரோக்கியத்தை கண்காணிக்க தொண்டை பகுதி தான் சிறந்த இடமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வயர்லெஸ் மற்றும் ஸ்ட்ரீம் செய்யும் சாதனத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களுக்கு அறிகுறி தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனம் தோலில் மிகச் சிறிய அதிர்வுகளை கணக்கிடுகிறது. மேலும், காய்ச்சலுக்கான வெப்பநிலை கணக்கிடப்படும் சென்சார் உள்ளது என்று ரோஜர்ஸ் கூறினார்.
இந்த சாதனம் இருமலைக் கணக்கிடுகிறது, இருமலின் தீவிரத்தை கண்காணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை தொண்டையில் வைக்கப்பட்டவுடன், அது இருக்கிறது என்பதை மக்கள் கூட உணரவில்லை என கூறினார். இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் 3,000 மணிநேர தகவல்களை சேகரித்ததாகக் கூறினார்.
தொற்றுநோயை அடையாளம் காணும் நோக்கத்துடன், கொரோனாவிற்க்கான முக்கிய அறிகுறிகளை காண சென்சார் அமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது என பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவரான ஷுவாய் சூ கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக