Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜூலை, 2020

5-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

'யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகுபகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்" ஆவார். சூரியனும், சந்திரனும் ராகுவிற்கு மிக அருகில் செல்லும்போது தனது முழுமையான சக்திகளை இழக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும்போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்துவிடுவார். நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகுபகவான்தான் செய்கிறார்.

ராகுபகவான் இன்பம் மற்றும் ஆதாயத்தை குறிப்பார். மேலும் ராகு எனும் நிழல் கிரகத்திற்கு ராசி அடையாளம் என்று ஏதும் கிடையாது. ஆனால், அது இருக்கும் ராசி அதிபதியினை கண்ணாடியில் பார்ப்பது போலான காரகத்துவங்களையும், பண்புகளையும் கொண்டிருக்கும்.

லக்னத்திற்கு 5-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து கொள்பவராக இருப்பார்கள்.

5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

👉 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

👉 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

👉 மனோதைரியம் உடையவர்கள்.

👉 வாக்குவன்மையால் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉 உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும்.

👉 மனைவி மற்றும் மக்கள் பற்றிய கவலைகள் மனதில் இருக்கும்.

👉 அலைச்சலுக்கு பின் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

👉 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

👉 முன்கோபம் உடையவர்கள்.

👉 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடியவர்கள்.

👉 எதிர்பாலின மக்களால் அடிக்கடி அவப்பெயர்கள் ஏற்படலாம்.

👉 விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக்கூடியவர்கள்.

👉 மனதிற்கு பிடித்தவர்களுக்காக அதிக செலவு செய்யக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக