Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஜூலை, 2020

7-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 ராகுபகவானை போல் யோகத்தை தரக்கூடிய கிரகம் வேறு எதுவுமில்லை. இதனால்தான் 'ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை, கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை" என பழமொழி உண்டு.

ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடை தானம் செய்து, உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகுபகவானிற்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும்.

ராகுபகவானே யோகங்களையும், போகங்களையும் வழங்கி மனித வாழ்வினை இன்புற செய்வார்.

லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவார்கள்.

7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

👉 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 மணவாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு.

👉 பலதரப்பட்ட மக்களின் தொடர்பு உண்டாகும்.

👉 ரகசிய நடவடிக்கைகளை உடையவர்கள்.

👉 வஞ்சனையான குணம் கொண்டவர்கள்.

👉 முதிர்ந்த களத்திரம் அமையும்.

👉 சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

👉 எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் ஏற்படும்.

👉 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

👉 உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக