ஜிவிகெ (GVK) குழுமத்தின் தலைவர் ஜி. வெங்கட கிருஷ்ண ரெட்டிக்கு எதிராக, சுமார் 805 கோடி ரூபாய் அளவிலான மோசடி (Money Laundering) குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) பதிவு செய்துள்ள வழக்கில் ஏர்போர்ட் அதாரிடி ஆஃப் இந்தியா (AAI) மற்றும் ஒன்பது தனியார் நிறுவனங்களின் சில அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), 2012 முதல் 2018 வரை, சுமார் 805 கோடி ரூபாய் பணத்தை தங்கள் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி பொது கருவூலத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜிவிகெ குழுமம் இந்தியாவின் மிக முக்கிய பெரு நிறுவனங்களில் ஒன்றாகும். பலவகைப்பட்ட துறைகளில் இவர்கள்ளது ஈடுபாடு உள்ளது.
சிபிஐ MIAL ஊழலை நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளது:
1. போலியாக பணிகளின் நிறைவைக் காட்டி பணம் கோரியது.
2. மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் உபரி அல்லது இருப்பு நிதிகளை தவறாக பயன்படுத்தியது.
3. நிதியின் பலதரப்பட்ட பயன்பாட்டின் மூலம், MIAL-ன் செலவினங்களை உயர்த்தியது.
4. MIAL இன் வருவாய் விவரங்கள்ல் வெளிப்படைத் தன்மை இல்ல்லாதது.
சிபிஐ மும்பை பிரிவு ஜூன் 27 எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளது. மொத்தம் 13 நபர்கள், சில நிறுவனங்கள் மற்றும் அறியப்படாத அரசு ஊழியர்கள் என பலர் இதில் பெயரிட்டுள்ளனர். இந்த மோசடி 2012-2018 காலகட்டத்தில் நடந்துள்ளது. எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக