இண்டிகோ
பைலட் முதல் அதிகாரி கேப்டன் ஜி பிரியவிக்னேஷ் என்பவர் தமிழர்களின் கவனத்தை தன்
வசம் ஈர்த்துள்ளார். சென்னை - மதுரை இண்டிகோ விமானத்தின் விமானியாக பணிபுரிந்து
வரும் கேப்டன் ஜி பிரியவிக்னேஷ், விமானத்தில் தனது பயணிகளுக்குத் தமிழில் விமான
அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார். இவர் தமிழில் அறிவிப்புகளை அறிவிக்கும் வீடியோ
தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
தற்போது விமானத்தில் அறிவிப்புகள் ஆங்கிலம் அல்லது இந்தி
மொழிகளில் தான் பெரிதும் வழங்கப்படுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 30 வயதான
கேப்டன் பிரியவிக்னேஷ் என்ற இண்டிகோ விமானி, சென்னையிலிருந்து மதுரைக்குச்
செல்லும் விமானத்தின் பயணிகளைத் தனது பிராந்திய மொழியான தமிழில் வழிகாட்டுதல்களை
அறிவித்து பயணிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
'வாழ்க தமிழ் வாழ்க பாரதம்'
என்று கூறி தமிழில் விமான பயணிகளுக்குத் தனது அறிவிப்பைக் கொடுக்க
துவங்கியுள்ளார். இந்த தமிழ் அறிவிப்பு வீடியோ, சமூகவலைத்தளத்தில்
வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரியவிக்னேஷை பலரும் பாராட்டிவருகின்றனர்.
குறிப்பாகத் தமிழ் நெட்டிசன்ஸ்களின் பரட்டை இவர் பெற்றுள்ளார். இவரின் சமூக
வலைத்தள பக்கங்கள் பாராட்டு மழையால் நனைந்துள்ளது.
பிரியவிக்னேஷ் தனது தமிழ் விமான
அறிவிப்பின் ஒரு சிறு கிளிப்பை வெளியிட்டதிலிருந்து நெட்டிசன்களிடமிருந்து
பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இப்போது ஆன்லைனில் வைரலாகிவிட்ட இந்த வீடியோவில்,
பிரியவிக்னேஷ் தமிழில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்குவதைக் கேட்பது
மட்டுமல்லாமல், அவர் ஒரு பயண வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார் என்பது
தெரிகிறது.
வானத்தில் விமானம் பறக்கும் பொழுது தனது பயணிகளுக்குத் தரையில்
உள்ள அடையாளங்களைச் சுட்டிக்காட்டுகிறார், உதாரணத்திற்குக் காவிரி நதி கொல்லிடாம்
மற்றும் பிரபலமான ஸ்ரீரங்கம் கோயில் போன்றவற்றைத் தனது தமிழ் அறிவிப்பின் மூலம்
பயணிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் தமிழில் அறிவிப்பை வழங்கியதும் அதனைத்
தொடர்ந்து பயணிகளுக்கு ஆங்கிலத்திலும் அவர் அறிவிப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
அவரின் வீடியோ அறிவிப்பில் கூறியதாவது
''இப்போது நாம் திருச்சி நகரத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் பறக்கிறோம். 10
நிமிடங்களில், வலதுபுறத்தில், காவேரி நதி மற்றும் கொல்லிடம் என இரண்டாகப் பிரியும்
பிரிவை நாம் காணலாம்.
ஸ்ரீரங்கம் மற்றும் கொல்லிடம்
என அழைக்கப்படும் இந்த இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள தீவு காவேரிக்கு
விநியோகிக்கும் நதியாகும். ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதன் கோயிலை அங்கே காணலாம்
"என்று பிரியவிக்னேஷ் தமிழில் கூறுகிறார். மற்றொரு 5 முதல் 7
நிமிடங்களுக்குப் பிறகு ''உங்கள் வலது பக்கத்தில் அழகர் மலைகளின் வனப்பகுதியை
நீங்கள் காணலாம். இடதுபுறத்தில், யானை மலையைக் காணலாம்.
அதன் அழகான காட்சி நமக்கு இப்பொழுது தெரிகிறது, மதுரை
நகரத்தின் மேல் அரைக்கோள காற்றுப்பாதையில் உயரத்தை படிப்படியாகக் குறைப்பதன் மூலம்
நாம் தரையிறங்கப் போகிறோம்"என்று அவர் சொல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. பலரின்
பாராட்டுக்கள் இவரின் பேஸ்புக் பக்கத்தை நிரப்பி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக