இந்தியாவில் கடந்த சில நாட்களாக
கொரோனாவை விட அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது
தான்.
இது டிக்டாக் பயனர்களிடையே பெரும்
ஏமாற்றத்தினை உருவாக்கியிருந்தாலும். பயனர்களின் பாதுகாப்பு, இறையாண்மை எனும் போது
அதனை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.
ஆனால் இந்தியா இந்த செயலியை தடை செய்த
சில தினங்களிலேயே அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் இதனை அந்த நாடுகளில்
தடை செய்ய ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் டிக்டாக்கின்
தலைமையகம் சீனாவில் இருப்பதால் தானே இந்த பிரச்சனை. அதனை வேறு இடத்திற்கு
மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய
பயனர்கள் அதிகம்
டிக்டாக் சீனாவின் நிறுவனம் என்றாலும்
அதன் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களே. ஆக இந்தியாவில் இருந்த இந்த
செயலி தடை செய்யப்பட்டது சீனாவுக்கு பெருத்த அடியாகவே இருக்கும் என்றும்
கருத்தப்படுகிறது. அதோடு சீனா நிறுவனங்கள் சீனாவின் சட்டப்படி, சீன அரசாங்கம் கேட்கும்
விவரங்களை கொடுக்க வேண்டும் என்பது தான். ஆக இந்த சட்டத்தின் படி, பயனர்களின்
விவரங்கள் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகமும் பரவலாக இருந்து வருகிறது.
அமெரிக்காவும்,
ஆஸ்திரேலியாவும் தடை
ஆக இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவில்
இருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தடை செய்ய
முயன்று வருவதாக கூறப்பட்டது. இது ஆனால் டிக்டாக் நிறுவனமே சீனாவுக்கு வெளியே
இருந்து தாங்கள் பணியாற்றுவதாகவும், மேலும் எந்தவொரு தரவும் சீனாவால்
நிர்வகிக்கப்படவில்லை என்றும் டிக் டாக் தெரிவித்துள்ளது.
தகவல்களை
பகிர்ந்து கொள்ளும் சட்டம்
எனினும் சீனாவில் 2017ம் ஆண்டின் தேசிய
புலனாய்வு சட்டம் சீனாவை தளமாகக் கொண்ட அல்லது சீன உரிமையின் கீழ் உள்ள அனைத்து
தொழில் நுட்ப நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது. ஆக இந்த சட்டமானது சீனா அரசாங்கம்
கேட்கக்கூடிய எந்தவொரு தகவல்களையும், பகிர்ந்து கொள்ள அனைத்து வணிகங்களையும்
கட்டாயப்படுத்துகின்றது. ஆக இதனால் தான் டிக்டாக் தடை பற்றி பல நாடுகளும்
ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
டிக்டாக்
வணிகம் பாதிக்கப்படலாம்
ஆக இப்படியே போனால் டிக்டாக்கின்
வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதன்
தலைமையகம் மாற்றப்படலாம். டிக் டாக்கினை பொறுத்தவரையில் அது பார்ப்பதற்கு எளிதாக
தோன்றலாம். ஆனால் அது உண்மையில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகின்றது.
விரைவில்
மாற்றப்படலாம்
ஏற்கனவே கடந்த சில தினங்களூக்கு முன்பு
டிக்டாக்கின் செய்தித் தொடர்பாளரும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சீனாவில் அதன்
செயல்பாட்டினை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பல
பயனர்களின் தரவை பகிர்ந்து கொள்ளலாம் என்ற குற்றசாட்டு பல தரப்பிலும் இருந்து
வருகிறது. ஆக விரைவில் இதன் தலைமையகம் மாற்றப்படலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக