பாம்பின்
கால் பாம்பறியும் என்று கூறுவார்கள், அப்படிதான் இந்த வீடியோவில் உள்ள
பாம்பிற்குக் கால்கள் இருக்குமோ என்று நம்மை யூகிக்கவைக்கிறது. அதற்குக் காரணம்
இந்த வீடியோவில் உள்ள மலைப்பாம்பு மிகவும் திறமையாக மரம் ஏறுகிறது. மலைப்பாம்பு
மரம் ஏறும் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
பாம்பு
மரம் ஏறுமா? என்று சந்தேகமாகக் கேள்வி கேட்பவர்களுக்கு இந்த வைரல் வீடியோ நல்ல
ஆதாரம். பாம்பு மரம் மட்டுமில்லை சுவர் கூட ஏறும். சுவரில் எரியப் பாம்புகளைக் கூட
சிலர் பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோவில் ஒரு பெரிய சைஸ் மலைப்பாம்பு மிகவும்
எளிதாக மரம் ஏறுகிறது. சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவை பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை இறுதியில் கமெண்ட் செய்யுங்கள்.
சுசாந்தா
நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரியின் டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ
பதிவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் சுசாந்தா நந்தா, பர்வீன் கஸ்வான், சுதா
ராமென் போன்ற இந்திய வனத்துறை அதிகாரிகளின் டிவிட்டர் பதிவுகள் அதிக கவனத்தை
ஈர்த்து வருகின்றது. இவர்கள் பதிவிட்ட பல வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆகியது,
தற்பொழுது இந்த வரிசையில் மலைப்பாம்பு வீடியோ வைரல் ஆகிவருகிறது.
மலைப்பாம்பு
ஒன்று செங்குத்தான பனை மரத்தில் வளைந்து நெளிந்து மரம் ஏறும் காட்சி இந்த வீடியோவில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பாம்பு மிகவும் நேர்த்தியாக தன் உடலை வளைத்து
மரத்தைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு மரம் ஏறுகிறது. மெதுவாகவும் சீராகவும் தனது
உடலை நகர்த்தி பாம்பு மரம் ஏறும் காட்சியில் 'பாம்பின் சிறந்த மேம்பாடு, அழகாக
மரத்தை சுற்றி ஏறும் பைதான்' என்றுகூறி வீடியோவை ட்வீட் செய்துள்ளனர்.
மலைப்பாம்பு
மரம் ஏறும் இந்த வீடியோ பதிவை அதிகமான பயனர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
அதிகமுறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாம்பின் நகரும் தன்மை குறித்துப் பதிவு
செய்த இந்த விடியோவை சுசாந்தா நந்தா "மிகச்சிறந்த முன்னெடுப்பு
அணுகுமுறை" என்று தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தொடர்பான கருத்துக்களைப்
பலரும் கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக