ஒரு அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத நினைத்தார். அவர் அமைதியான இடத்திற்கு செல்லலாம் என்று அரக்கர்கள் இருக்கும் இடத்திற்க்கு, தெரியாமல் சென்றுவிட்டார். அறிஞரை பார்த்த ஒரு அரக்கன் யார் நீ? என்றான்.
நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்! என்றார். இங்கு வந்ததற்கு தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி அவரை குரங்காக மாற்றிவிட்டான் அரக்கன்.
அவர் அழுதுகொண்டே, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் குரங்குகளைப் போல் பழங்களைத் தின்றார். பின்பு அவர் நகரத்திற்க்கு சென்றார். அங்கு பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலில் அவர் ஏறினார். அதிலிருந்தவர்கள் சத்தம் போட்டனர். குரங்கை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்! என்றார்.
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் மிகவும் நன்றாக தகுந்த முறையில் எழுதி அனுப்புபவர்க்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் செய்தி அறிவிக்கப்பட்டது.
அனைவரும் செய்தி எழுதினர், அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். எல்லாச் செய்திகளையும் அரசர் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்ததால், அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து வந்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
அனால், அரசர் தீர்மானமாக குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு இல்லை. ஏதோ அரக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் அறிஞரை பழைய நிலைக்கு மாற்றினாள்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றி விஸ்வாசத்தோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி :
அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக