🔆 திதி : பிற்பகல் 12.27 வரை துவிதியை பின்பு திரிதியை
🔆 நட்சத்திரம் : மாலை 04.58 வரை அஸ்வினி பின்பு பரணி
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மாலை 04.58 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
பண்டிகை
🌷 மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவம்.
வழிபாடு
🙏 துர்காதேவியை வழிபட தடைகள் எல்லாம் விலகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 காளை மாடுகளை வாங்குவதற்கு உகந்த நாள்.
🌟 சாலை அமைப்பதற்கு ஏற்ற நாள்.
🌟 யாத்திரை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
🌟 சாஸ்திர பயிற்சி பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
---------------------------------------
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
---------------------------------------
மேஷ லக்னம் 07.11 AM முதல் 08.55 AM வரை
ரிஷப லக்னம் 08.56 AM முதல் 10.58 AM வரை
மிதுன லக்னம் 10.59 AM முதல் 01.09 PM வரை
கடக லக்னம் 01.10 PM முதல் 03.17 PM வரை
சிம்ம லக்னம் 03.18 PM முதல் 05.19 PM வரை
கன்னி லக்னம் 05.20 PM முதல் 07.19 PM வரை
துலாம் லக்னம் 07.20 PM முதல் 09.25 PM வரை
விருச்சிக லக்னம் 09.26 PM முதல் 11.36 PM வரை
தனுசு லக்னம் 11.37 PM முதல் 01.44 AM வரை
மகர லக்னம் 01.45 AM முதல் 03.38 AM வரை
கும்ப லக்னம் 03.39 AM முதல் 05.21 AM வரை
மீன லக்னம் 05.22 AM முதல் 07.06 AM வரை
---------------------------------------
இன்றைய ராசி பலன்கள்
---------------------------------------
மேஷம்
எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அஸ்வினி : வாதங்கள் மறையும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
ரிஷபம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கம் இன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : புரிதல்கள் ஏற்படும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
புனர்பூசம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
பூசம் : பயணங்கள் கைகூடும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். தடங்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : முடிவுகள் பிறக்கும்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
கன்னி
அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொது சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
---------------------------------------
துலாம்
வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். திடீர் செலவுகள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
சுவாதி : தடைகள் விலகும்.
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமான தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சந்தைப்படுத்தும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
கேட்டை : மதிப்பளித்துச் செயல்படவும்.
---------------------------------------
தனுசு
எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூராடம் : இலக்குகள் பிறக்கும்.
உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
மகரம்
மனதில் எண்ணிய எண்ணம் நிறைவேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
உத்திராடம் : எண்ணம் நிறைவேறும்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : ஆர்வமின்மை குறையும்.
---------------------------------------
கும்பம்
செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்ப்பு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
மீனம்
சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்து இருந்து வந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : உற்சாகமான நாள்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக