1.
வேங்கட மலை:
‘வேம்’
என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால்
இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்)
மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2.
சேஷ மலை:
பெருமாளின்
அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று
அழைக்கப்படுகிறது.
3.
வேதமலை:
வேதங்கள்
இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4.
கருட மலை:
இங்கு
சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5.
விருஷப மலை:
விருஷபன்
என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப
மலை’ எனப் பெயர் பெற்றது.
6.
அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின்
தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’
எனப்படுகிறது.
7.
ஆனந்த மலை:
ஆதிசேஷன்,
வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும்
பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம்
அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக